Monday, July 23, 2018

முடிவுரை

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்





' திரு ' வென்று தொடங்கித் 'தங்கு' 

மென்று முடிவுறுவதால் இப்பதிகத்தை 

பாடுவோ ரில்லங்களில் செல்வம் 

தங்கிப் பேரின்பம் பயக்கும். கடன் 

அடைபடும்.  திருமலைக்குப் 

புறப்படுவதிலிருந்து கிரியேறிக் 

கோயிலை அடைந்து,  நுழைந்து,  

காட்சிபெற்று, உண்டியல் செலுத்திப்,  

படையலலுண்டு,  மண்டபத்தில் 

இளைப்பாறி வெளிவரும்  வரை  

பாடல்கள்  நிரையாக 

அமைந்துள்ளமையால் 

இப்பதிகத்தைப்  பாடுவோர் 

திருமலைக்குத்  திருப்பயணம் 

செய்ததன் பலனையும் பெறுவர்.


தொகுப்பும் , அமைப்பும் :  கவிஞர். இரா. நக்கீரன்,  

கவிதாலயம், வேலூர் (வ.ஆ.)




CONCLUSION

As this book begins with the auspicious word  

" Thiru "  meaning beauty and wealth,  the 

devotees who chant these hymns will prosper 

with health, wealth and happiness. Their loans 

will be cleared quickly and completely. They will 

have the benefit of having performed the 

pilgrimage to the Seven Hills.

பத்தாம் பாடல்


திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்



(உன் கோயிலையும் அரசுடைமையாக்கின் நாட்டு மக்களனைவர்க்கும் நன்மையாகுமே என்று பாடியது)


சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாட்டு என்பதை நினைவில் கொள்ளவும்

தங்கும்பண வங்கிகளும் பங்கம்மல்கு மாலைகளுந்

தங்கிச்செல்லும் வண்டிகளும் பண்டஞ்செல்லு மங்கடியுந்

தங்கந்தங்கு முன்னிடமுஞ் சங்கந்தங்கும் வேங்கடேனே !

அங்கமர சேற்குமெனி லெங்கும்பொங்கி யின் பந்தங்கும்.


பொழிப்புரை:

                                சங்கந் தரித்த வேங்கடனே ! 

பணந்தங்கும் வங்கிகளையும் குறைகள் 

நிறைந்த ஆலைகளையும், தாமதித்துச் 

செல்லும் வண்டிகளையும், (பேருந்து 

புகைவண்டி முதலியன)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பண்டங்கள் 

கைமாறுகின்ற கடைத் தொகுதிகளையும் 

தங்கம் நிறைந்துள்ள உன் கோயிலையும் 

அரசாங்கம் ஏற்று நடத்தினால் இன்பம் 

நாடெங்கும் பொங்கி நிலைபெற்றிருக்கும் 

என்பதாம்.



10. ‌ Oh Lord Venkateswara, who is wearing the

sacred conch !  If the (central) Government

(completely) nationalises the money -filled

banks, the faulty factories, the late -running

transport, the commodities-filled supermarkets

and your gold-filled temple, happiness and

prosperity will flurish and spread throughout

the country.


மீண்டும் பிரார்த்திப்போம்.

Sunday, July 22, 2018

ஒன்பதாம் பாடல்

               திருப்பதி வெங்கடாசலபதிக்கு                                          சமர்ப்பணம்




(மேற்பொருட் பறித்தல், மறைபொருட் பெறுதல், மிகுபொருள் கேட்டல், மடிபொருள் மாற்றல் முதலான பாவங்களைத் திருமலையிற் செய்வோரைக் கடிந்து பாடியது)


நாமத்தைப்  பாராமற்  பாவத்தைச் செய்திடுவார்

நாமத்தைப் பார்ப்பானே  னென்றிருகண் பொத்தினையோ ? 

நாமத்தை  நீநீக்கி நோக்காயேல்  நாரணனே

நாமத்தை நானேதேன் நாமத்தைக் காத்திடுவாய்.

பொழிப்புரை:

                              நாரணனே ! 

திருமலையிலுள்ளோர் சிலர் அச்சமில்லாமல்

பாவத்தைச் செய்கின்றார், நாம் அந்தப் 

பாவங்களைப் பார்ப்பானேன் 

என்றெனண்ணி  இருகண்களையும் 

நாமத்தால் மறைத்தனையோ ?  அந்த 

நாமத்தை நீக்கிப் பாவங்களைக் கண்டு 

ஆராய்ந்து அவற்றைச் செய்வோரை 

யொறுக்காவிடில் நான் உன் பெயரைச் 

சொல்லி வாழ்ந்தேன். ஆகவே பாவியரை 

யொறுத்து உன் புகழை நிலைநாட்டுவாயாக 

என்பதாம்.



    9.  Oh Lord Narayana !  Even in Tirumala some

 people are committing sins without fearing Your

 presence. Did you hide Your eyes with a large " 

Namam"  , thinking perhaps that you could not 

bear to see the sins committed in the very 

vicinity of Your temple ? But I couldn't bear this. 

I beseach You ,if you do not remove your 

" Namam "  and look into all these sins, I will not 

chant your name any more. So punish these 

sinners and establish Your name and fame.


மீண்டும் பிரார்த்திப்போம்.         







எட்டாவது பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு

சமர்ப்பணம்



(திருமலைக்கு வருவோர் சிலரின் அறியாமையை நொந்து பாடியது)


அருள்நாடி வருவாரு முருண்டேத்த வருவாரும்

பொருள்தேடி வருவாரும் பொருள்போட வருவாருஞ்

செருக்கோடு வருவாரு முருக்காட்ட வருவாரும்

பெருக்கோடுந் திருமலையா  மருள்நீக்கி யருள்வாயே !

பொழிப்புரை:

                              உனனரு ளொன்றையே நாடி

 வருவாரும் ,  கோயிற் பிராகாரத்தில் 

உருண்டு வழிபட வென்றே வருவாரும்,  

பொருளீட்டுதற் கென்றே வருவாரும்,  

வேண்டுதற் பொருளைப் போடுதற் கெனவே 

வருவாரும்,  தம் செல்வமும் பதவிகளுமாகிய 

பெருமைகளைக் காட்டுதற் கென்றே 

வருவாரும்,  தம் உருவ நலன்களை 

வெளிக்காட்டும் நோக்குடனேயே ஒப்பனை 

புரிந்துவரும் பெண்டிரும் ஆகிய இம்மக்கட் 

பெருக்கு ஓடுதற் கிடனாகிய திருமலையில் 

எழுந்தருளியுள்ளவனே!  இவர்களுடைய 

அறியாமையை நீக்கி  யருள்வாய் என்பதாம்.






8. ‌‌‌ Oh Lord !  Look at the devotees coming to 

Tirumala like flood.  Some have come only to get 

Your grace;  some have come only to roll around 

Your Sanctum in fulfilment of their vows ; some 

have come only in search of money (like the 

vendors and thieves); some have come only to 

drop money and jewels into the hundi; some 

have come only to display their pomp (car, 

jewels,etc..); and some have come only to display 

their figures (women with makeup),  I beseach 

You to remove their ignorance and grace them 

with the knowledge of true devotion and 

worship.

மீண்டும் பிரார்த்திப்போம்.



Wednesday, July 18, 2018

ஏழாவது பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்.

(கோயில் மண்டபத்தில் ஓய்வுற்றிருந்தபோது கண்ட காட்சிகளைப் பாடியது)


குழவிசில மலங்கழிக்கு பலமுறையுஞ் சலங்கழிக்கும்

கிழடுபல விலைகழிக்குஞ் சிறுமிபல வாய்வழிக்கும்

பழகுதடங் கால்வழுக்குங் குழலமெழு வேங்கடேனே 

பழகுதமிழ்க் கவிமொழிந்தென் வினை கழிக்க வந்துளேனே !


பொழிப்புரை

                               சில குழவிகள் மலங்கழிக்கா

 நிற்கவும் அவையே பலமுறையும்

மூத்திரமுங்  கழித்துக் கொண்டிருக்கவும்,

முதியோர் பலர் பிரசாதத்தை வாங்கி

சுட்டுவிட்டு  இலைகளை அங்கேயே கழியா

நிற்கவும்,  சிறுமிகள் பிரசாதந் தோய்ந்த

கைகளைத்  தூண்களிலும் தரையிலும்

வழிக்கா நிற்கவும்,  அடியாரடிகள் பட்டுப்

பழகித் தேய்ந்த கற்றரை  கால்கள்

வழுக்குதற்கு  ஏதுவாகவும் நிற்கும்

பிராகாரத்தைக்  கொண்ட கோயிலில்

எழுந்தருளியுள்ள வேங்கடனே !

கையாளுதற்கு மிகவெளியே உன் மீது

கவிபாடி  என் பாவத்தையும் இந்த

பிராகாரத்தில் கழித்துச் செல்லும்

நோக்கோடு வந்துள்ளேன்.  அருள்

புரிவாயாக என்பதாம்.

7.  Oh Lord Venkateswara,  Who are enshrined in

a temple, the floor of which has become slippery

due to the trampling of thousands of devotees

daily !  In the spacious  halls of Your temple the

infants excrete some times;  they urinate  many

times ;  Old people discard  the  leaves  after

eating the " Prasadam" ; small girls wipe their

hands on the pillars and walls.  In the same way

I have also come to your temple to discard my

sins by singing Your praise in easy Tamil.

மீண்டும் பிரார்த்திப்போம்.









Tuesday, July 17, 2018

ஆறாவது பாடல்


திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்.



(இலட்டு வடை போன்ற பலகாரங்களும்  சித்ரான்னங்களும் மடப்பள்ளியில் பிரசாதமாகப் பெருமளவில் தயாராவதை நினைந்து பாடியது)


நெய்யோசிறு  பொய்கைசிறு  நெல்லோவுயர்  மலையாம்

செய்ந்நீரிருஞ் சகரஞ்சருக் கரையோமண தானாய்

நெய்வேத்தியஞ் செய்வாரதை நாளுந்தின லானாய்

ஐயோவிது வெல்லாமுன துதரங்கலக் கலையோ ? 

பொழிப்புரை

                               (வேங்கடேன) உனக்கு

படைக்கப்  பலகாரங்களுக்காச்

செலவிடப்படும்  நெய்யோ சிறு

பொய்கையளவு ; சிறுமணிகளாகவுள்ள

நெல்லோ உயர்ந்த மலையினளவு ;

சமைக்கப் பயன்படும் நீரோ கடலினளவு;

சருக்கரையோ மணலாற்றினளவு.

இத்துணைப் பொருட்களையும்

நல்லடிசிலாக்கி யுனக்குப் படைக்கின்றனர்.

இவ்வளவையும் நாளுந் தின்று

வருகின்றாயே.  இவையெல்லாம் சேர்ந்து

உன் வயிற்றைக் கலக்கவில்லையோ

என்பதாம்.




6.  I  also wonder at the large quantities of

eatable oblations placed before you daily.  It

looks as though the quantity of ghee used should

have been the size of a small tank,  the paddy

that of a towering hill ,  the water that of an

ocean and the sugar that of the sands of a  river!

 After eating such quantities of food daily l

wonder why your stomach is not upset so for!


மீண்டும் பிரார்த்திப்போம்.
             ‌

ஐந்தாம் பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்.

(உண்டியலின்  பெருமையையும்  பெரும்பொருள்  சேரும்  அருமையையும்  வியந்து  பாடியது)


5. இரும்பீர்க்குங்  காந்தமணி யீசீர்க்குந் தீபமொளி

சுரும்பீர்க்கும்  பூத்தமல  ரூனீர்க்குமின்  சாரவலி

எறும்பீர்க்குஞ்  சருக்கமணி  யுளம்பார்க்கும்  வேங்கடனே

விரும்பீயும்  பேருண்டி  பொன்னீர்த்தல்  விந்தையரோ !





பொழிப்புரை

                               அடியார்கள்  தம்மனத்தினுட் கொண்ட குறைகளைக்  காணவல்ல வேங்கடனே !  காந்தக்கல்  இரும்பை  யீர்க்கும் ; பூத்த மலர் வண்டுகளை தீர்க்கும் ; சருக்க  மணி எறும்பை  யீர்க்கும்; ‌ மின்சார  வலி உடலை யீர்க்கும் .  ஆனால் எல்லோரும்  விரும்பிச் செலுத்தும் பெரிய திருப்பதி யுண்டி பொன்னையும் தன்பாலீர்த்தல்  விந்தையே என்பதாம்.

I  know that magnet attracts iron , burning lamp attracts the moth a blooming flower attracts the bees , electric current attracts even the flesh and a grain of sugar attracts the ants .  But I wonder how the enormous hundi in your temple attracts so much of money and wealth from your devotees who pour their belongings into it willingly !

மீண்டும் பிரார்த்திப்போம்.

நான்காம் பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்



(தரிசனங்  கண்டு  கர்ப்பக்  கிரகத்தினின்று

வெளிவந்ததும்  மனதாரத்  தரிசனங்

கிடைக்காதது  குறித்து  வருந்தி,

சொல்லுக்கும்  செயலுக்கும்  சம்மந்தமின்றி

வழிபடுவோரைப்  பழிப்பதுபோற்  பாடியது.) 



சிற்றச்  சிறுகாலே  வந்தென்னுந் திருப்பாவை

முன்னஞ்  சீரடியை  மன்னுஞ்  சீரடியார்

முற்றந்  தனிலோய்வாய்  பத்தென்று   ‌‌   மணிகாட்ட

சிற்றடிகள்  முன்னீட்டி  சொற்பதங்கள் தாங்கூட்டி

வற்றுங்  குரலாலே  சற்றும்  பற்றின்றிக்

கத்தும்  வழியிற்றான்  முற்றுங் கற்றான்போற்

பற்றுங்  கோளொடுயா  னாமஞ் சாற்றிடுவேன்

எற்றித்  தள்ளாம  லேற்றுப்  புரந்திடுவாய் !




சிற்றஞ்  சிறுகாலே  என்று  தொடங்குந்

திருப்பாவையின்  முதலடியாகிய  அழகிய

சீர்களைக்  கொண்ட  அடியை  நிலைபெற்ற

புகழையுடைய  அடியா  ரொருவர்  தம்வீட்டு

முற்றத்தில்  ஓய்வா  யமர்ந்து  கடிகாரம்

காலை  மணி  பத்தென்று  காட்டிக்

கொண்டிருக்கத்  தம்  புன்மையான  அடிகளை

 நீட்டிக்  கொண்டு  சொற்களை  மெதுவே

கூட்டி  உரத்த  குரலில்  பக்தி  சிறிதுமின்றிப்

பாடிய  வழியில்  நானும்  எல்லாம்

கற்றவனைப்  போல  உன்னைக்  கவர்ந்து

அருள்பெற  வேண்டுமென்ற  ஒரே

குறிக்கோளோடு  உள்ளத்தில்

அன்பில்லாமல்  உன்  பெயரை  மட்டும்

சொல்லிக்  கொண்டுள்ளேன். அதற்காக

என்னை  உதைத்துத்  தள்ளி  விடாமல்

ஏற்றுக்  காப்பாயாக  என்பதாம்.




4. Oh, Lord ! I am chanting your holy name

without concentration to get Your grace like the

devotee who leisurely chants the hymn from

"Thiruppavai" beginning with the words"

"Sittramchirukale" at 10 AM sitting in the

veranda of his house, with his legs extended in

front, who is chanting that hymn slowly

faltering

for words every now and then, with a big

choking voice, without real piety, as if he is

having the complete knowledge of God. So I

beseach you not to kick me away for this deceit

but to approve my prayer and grant me

protection.

மீண்டும் பிரார்த்திப்போம்.

மூன்றாம் பாடல்



(தரிசனங் கிடைத்த போது கொண்ட மனநிலை)

ஏவலை முடித்திடு மேவுருக் காணுமுன்

தாவலைப் புரிந்திடுந் தனிக்குரங் கமையவே

காவலைக் கடந்துன் காலடி பிடிக்குமென்

ஆவலை யடக்கியே யகலவோ வடவனே ?


பொழிப்புரை:
                         அடியார்களுடைய

ஏவல்களனைத்தையும் முடித்துத் தரும்

உன்னுடைய உயர்ந்த உருவத்தைக்

காணுவதற்கு மாறாக (காணக் காலங்

கொடாமையால்) தாவற்குணமுடைய சிறந்த

குரங்கைப் போல் இங்குள்ள காவலைக்

கடந்து உன் காலடிகளைப் பிடித்துக் கொள்ள

வேண்டும் என்ற என்னுடைய ஆவலை

யடக்கிக் கொண்டு அகன்று செல்லவோ

வடவேங்கடக் கடவுளே என்பதாம்.








3. Instead of having your darshan who are

fulfilling my errands, shall I move away from

your presence, quenching my desire to jump

over to you like a monkey, after crashing through

 those guards and embrace your feet?


மீண்டும் பிரார்த்திப்போம்.

Monday, July 16, 2018

இரண்டாம் பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்


(தரிசனப் பொழுதில் துரிதப் படுத்துவதை நொந்து பாடியது)

2. ‌முன்செல்லு முன்செல்லு மென்றசொலு மென்செவியில்

வன் சொல்லாய் வீழ்ந்ததுவே வேங்கடவா மின் வெல்லும்

பொன்செல்லு முன்மனையிற் பண்சொல்லும் வேதியர்கள்

கண்செலவும் பொழுதின்றிக் கடத்துகிறா ரென்செய்வேன்?

பொழிப்புரை:

                         வேங்கடவா! முன்னே நகர்ந்து

செல்லும் முன்னே நகர்ந்து செல்லும் என்று

மந்திர மோதும் வேதியர்கள் கூறிய

சொற்களும் என் செவியில் வன்சொற்களாய்

வீழ்ந்தன. மின்னலையுந் தன்னொளியால்

வெல்லும் பொன் சென்று சேருகின்ற உன்

கோயிலில் உன்னை காணவுங் காலங்

கொடாது முடுக்குகின்றனரே,

என்செய்வேன்? என்பதாம்.

Lord Venkateswara ! The words"move forward,

move forward" ring in my ears as harsh words,

since the time for your darshan is thereby

shortened. The manthra-chanting priests in your

 temple which wins the lightning in its glow and

where the melting gold flows all over, urge me to

 move quickly and act like throwing me out

before I could have a glimpse of you. Oh, Lord,

what shall I do ?




மீண்டும் பிரார்த்திப்போம்.

நூல் முதல் பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்

(தரிசனங் கிடைத்தலி னருமையை வியந்து பாடியது)

1. திரு நகரஞ் சுற்றி யெழு சிகரஞ் சுற்றி

    யென் சிரசஞ் சுற்ற வஞ்சிகரஞ் சார்ந்து

   கரு மகரஞ் சுற்று மொரு தடகம் மூழ்கி

  துணி பலவுஞ் சுற்ற யணி பலவுஞ் சாற்றி

  தெரு பலவுஞ் சுற்றும் நெடு வரிசை பற்றி

  மணி பலவா நின்று பிணி பசியோ டூர்ந்து

  பெரும் பிரகரஞ் சுற்றி யருங் கிரகம் வந்து

  திரு வுருவங் காணக் கணமுந் தரவிலையே!

பொழிப்புரை

                        அழகிய  நகரமாகிய

திருப்பதியை  சுற்றி,  ஏழு  மலைகளையும்

சுற்றிச்சுற்றி  யேறி,  என்  தலை  சுற்றும்படி

(பேருந்தில்)  அழகிய  உச்சியை  அடைந்து,

கரிய  மீன்கள்  நீந்தி  திரியும்  ஒப்பற்ற

புட்கரிணியில்  மூழ்கி  பல்வகையாடைகளை

யணிந்து  ஆபரணங்கள்  பலவற்றையும்

பூண்டு  பல  தெருக்களையும்  சுற்றி

வருகின்றன  நீண்ட  வரிசையில்  இடத்தைப்

பிடித்தது  பலமணியளவாக  நின்று

அதனாற்றோன்றிய  பசிப்பிணிகளோடு

மெல்ல  ஊர்ந்து  சென்று  பெரிய

பிராகாரங்களையும்  சுற்றி  அடைதற்கரிய

கர்ப்பக்  கிரகத்தை  அடைந்தும்  உன்

திருவுருவத்தைக்‌  காணக்

கணமொன்றையும்  இங்குள்ளோர்  தந்திலரே

 என்பதாம்.




After roaming through the roads of Thirupathi

negotiating the seven hills one by one with my

head realing (due to nausea) I reach the top. I

have a dip in Pushkarini where black fish are

swimming about; I dress up with many a good

clothes; I wear many ornaments; I catch a place

in the long queue which winds through the

many streets around Your temple; I stand there

for many hours; I move slowly with hunger and

minor ailments (like headache,pain in knee

joints etc); I move through the big Prakarams of

the temple; finally I reach the Sanctum

Sanctorum. But after undergoing all these

hardships oh Lord Govinda! it is a pity that I am

not given even a single moment for your

darshan.



மீண்டும் பிரார்த்திப்போம்.

Saturday, July 14, 2018

பாயிரம்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்



          கிரிமேல் வாசனை யருளாங் காமனை

விரிசீர் வாசனை விழிசேர் நாமனை

பரிமே லழகனை பழிதீர் நாயனை

நரிமேல் நாயனே னானான் குரைப்பேன்.

பொழிப்புரை

                           திருவேங்கட மலைமீது வாசம்

செய்பவனை, அருளாகிய

செல்வத்தையுடையவனை, அண்ட முழுவதும்

 பரந்த புகழையுடைய வாமனவதாரனை,

விழிகளை மறைக்கும்

நாமத்தையணிந்தவனை, பரிமேலமர்ந்த

அழகிய போர் வீரன் போன்று வேங்கடத்தின்

மீது எழுந்தருளியிருப்பவனை , குற்றம் தீர்ந்த

 தலைவனைப் பற்றி நரி மேலமர்ந்த நாய்

போன்றவனாகிய நானும் நான்கு (சில)

செய்திகளைக் கூறுவேன்.

                  


I, as a dog riding a fox, am going to say a few

words about the Lord of the Seven Hills, who is

having His Grace as His wealth, who once

incarnated Himself as the famous Vama, who is

wearing the eyes-covering "Namam" on his

forehead, who looks like a warrior on horseback

 and who is a leader without blemish.

The words in this verse have been so selected as

to give a second meaning also as follows_I am

going to say a few words about the fragrance

pervading Seven Hills, the Lord who is having

the coins obtained by exchanging His grace with

 His devotees, who, as Vama, grew to enormous

heights and lengths to scale the world and the

sky, who is having the enchanting name of

Govinda, the uttering of which brings tears from

 the eyes, who takes revenge on those who fail to

fulfill their vows, who like Parimelazagar the

commentator to Thirukkural, stands on the

Seven Hills as the embodiment of the Universal

Being.

மீண்டும் பிரார்த்திப்போம்.

வாழ்த்து


திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்.




வாழ்த்து 

               
வீங்கிடரை தீர்த்துவரும் விடுமாழி சங்கமதும்

ஓங்கிடவே காட்சிதரு மோராழி சீர்க்குபரர்

தாங்கடனை தீர்த்துவருந் தாழருவி யார்த்துவரும்

வேங்கடனை வாழ்த்தியா னென்கடனை தீர்திடுமால்.

பொழிப்புரை

                          மேன்மேலும் வருந்துன்பங்களைத் தீர்த்து வருபவனும் பெருமை பொருந்திய சக்கரமும் சங்கமும் விளங்குமாறு காட்சியளிப்பவனும் ஒப்பற்ற கடலளவாயுள்ள செல்வத்தை உடைய குபேரன்பாற் பட்ட கடனை தீர்த்து வருபவனும் தாழ்ந்து தவழ்ந்து வரும் பாபனாசம் என்கின்ற புண்ணிய அருவி ஒலித்துக் கொண்டு ஓடுதற்கிடமான வேங்கடத்தை தன்னிருப்பிடமாக கொண்டிருப்பவனுமாகிய கோவிந்தனை வாழ்த்தி யான் என்னுடைய கடமையைச் செய்து முடிப்பேன்.

A Synopsis of Thiruvengada Thiruppathigam
PRAYER
Before commencing my composition of Thiruvengada Thiruppathigam I praise Lord Venkateswara, who relieves me from the constant onslaught of my hardships, who gives darshan wearing the releasing wheel (which He releases to relieve His devotees from their enemies) and the sacred conch, who is repaying the debt received from Kubera having wealth the size of an ocean and who resides on the Thirupathi Hills where the waterfall (Papanasam) flows with a roar.

மீண்டும் பிரார்த்திப்போம்.

Friday, July 13, 2018

முன்னுரை

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்








நூல் அறிமுகம்


திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்



எங்கள்  தந்தையார்  திருப்பதி

வெங்கடாசலபதி  மீது  அளவற்ற  பக்தி

கொண்டிருந்தார்.  வருடம்  தவறாமல்

திருப்பதிக்கு  யாத்திரை  செல்வார்.  பல

சமயம்  கால்நடையாக  மலை  ஏறுவதும்

முடிக்காணிக்கை  செலுத்துவதும்  அவரது

வழக்கம்.

தாய் மொழி  தமிழாக  இல்லாத  போதிலும்

தமிழில்  அவருக்கு  நல்ல  புலமை  உண்டு.

திருவேங்கடவன்  மீது  கொண்ட  பக்தியும்

தமிழ்  மீது  கொண்ட  பற்றும்  இணைந்து

உருவானதே  இந்த  திருவேங்கடத்

திருப்பதிகம்  என்னும்  பாடல்  தொகுப்பு.

தன்  சொந்த  செலவில்  அச்சிட்டு

எல்லோருக்கும்  இலவசமாக  வினியோகம்

செய்தார்.  தமிழ்  அறியாதவர்கள்  புரிந்து

கொள்ள  ஆங்கிலத்தில்  சிறு  விளக்கமும்

எழுதியுள்ளார்.

சுமார்  நாற்பது  வருடங்களுக்கு முன்

எழுதப்பட்ட  இந்த பாடல்கள்  திருப்பதி

வெங்கடாசலபதியுடன் உரையாடுவது

போன்று  அமைந்துள்ளது. நான்  சிறுமியாக

இருந்தபோது என் தந்தை இந்த பாடல்களை

தன் சொந்த மெட்டில் தாளம் போட்டபடி

பாடியது எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது.

நகைச்சுவையும்  பக்தியும்  கலந்த  இந்த

பாடல்களை  பலரும்  படித்து

சுவைப்பதற்காக  வலைப்பதிவாக

சமர்ப்பிக்கிறேன்.


நன்றி.

Markandeya Pooja