திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்
(மேற்பொருட் பறித்தல், மறைபொருட் பெறுதல், மிகுபொருள் கேட்டல், மடிபொருள் மாற்றல் முதலான பாவங்களைத் திருமலையிற் செய்வோரைக் கடிந்து பாடியது)
நாமத்தைப் பாராமற் பாவத்தைச் செய்திடுவார்
நாமத்தைப் பார்ப்பானே னென்றிருகண் பொத்தினையோ ?
நாமத்தை நீநீக்கி நோக்காயேல் நாரணனே
நாமத்தை நானேதேன் நாமத்தைக் காத்திடுவாய்.
பொழிப்புரை:
நாரணனே !
திருமலையிலுள்ளோர் சிலர் அச்சமில்லாமல்
பாவத்தைச் செய்கின்றார், நாம் அந்தப்
பாவங்களைப் பார்ப்பானேன்
என்றெனண்ணி இருகண்களையும்
நாமத்தால் மறைத்தனையோ ? அந்த
நாமத்தை நீக்கிப் பாவங்களைக் கண்டு
ஆராய்ந்து அவற்றைச் செய்வோரை
யொறுக்காவிடில் நான் உன் பெயரைச்
சொல்லி வாழ்ந்தேன். ஆகவே பாவியரை
யொறுத்து உன் புகழை நிலைநாட்டுவாயாக
9. Oh Lord Narayana ! Even in Tirumala some
people are committing sins without fearing Your
presence. Did you hide Your eyes with a large "
Namam" , thinking perhaps that you could not
bear to see the sins committed in the very
vicinity of Your temple ? But I couldn't bear this.
I beseach You ,if you do not remove your
" Namam " and look into all these sins, I will not
chant your name any more. So punish these
sinners and establish Your name and fame.
மீண்டும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment