திருப்பதி வெங்கடாசலபதிக்கு
சமர்ப்பணம்
(திருமலைக்கு வருவோர் சிலரின் அறியாமையை நொந்து பாடியது)
அருள்நாடி வருவாரு முருண்டேத்த வருவாரும்
பொருள்தேடி வருவாரும் பொருள்போட வருவாருஞ்
செருக்கோடு வருவாரு முருக்காட்ட வருவாரும்
பெருக்கோடுந் திருமலையா மருள்நீக்கி யருள்வாயே !
பொழிப்புரை:
உனனரு ளொன்றையே நாடி
வருவாரும் , கோயிற் பிராகாரத்தில்
உருண்டு வழிபட வென்றே வருவாரும்,
பொருளீட்டுதற் கென்றே வருவாரும்,
வேண்டுதற் பொருளைப் போடுதற் கெனவே
வருவாரும், தம் செல்வமும் பதவிகளுமாகிய
பெருமைகளைக் காட்டுதற் கென்றே
வருவாரும், தம் உருவ நலன்களை
வெளிக்காட்டும் நோக்குடனேயே ஒப்பனை
புரிந்துவரும் பெண்டிரும் ஆகிய இம்மக்கட்
பெருக்கு ஓடுதற் கிடனாகிய திருமலையில்
எழுந்தருளியுள்ளவனே! இவர்களுடைய
அறியாமையை நீக்கி யருள்வாய் என்பதாம்.
8. Oh Lord ! Look at the devotees coming to
Tirumala like flood. Some have come only to get
Your grace; some have come only to roll around
Your Sanctum in fulfilment of their vows ; some
have come only in search of money (like the
vendors and thieves); some have come only to
drop money and jewels into the hundi; some
have come only to display their pomp (car,
jewels,etc..); and some have come only to display
their figures (women with makeup), I beseach
You to remove their ignorance and grace them
with the knowledge of true devotion and
worship.
மீண்டும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment