Wednesday, July 18, 2018

ஏழாவது பாடல்

திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்.

(கோயில் மண்டபத்தில் ஓய்வுற்றிருந்தபோது கண்ட காட்சிகளைப் பாடியது)


குழவிசில மலங்கழிக்கு பலமுறையுஞ் சலங்கழிக்கும்

கிழடுபல விலைகழிக்குஞ் சிறுமிபல வாய்வழிக்கும்

பழகுதடங் கால்வழுக்குங் குழலமெழு வேங்கடேனே 

பழகுதமிழ்க் கவிமொழிந்தென் வினை கழிக்க வந்துளேனே !


பொழிப்புரை

                               சில குழவிகள் மலங்கழிக்கா

 நிற்கவும் அவையே பலமுறையும்

மூத்திரமுங்  கழித்துக் கொண்டிருக்கவும்,

முதியோர் பலர் பிரசாதத்தை வாங்கி

சுட்டுவிட்டு  இலைகளை அங்கேயே கழியா

நிற்கவும்,  சிறுமிகள் பிரசாதந் தோய்ந்த

கைகளைத்  தூண்களிலும் தரையிலும்

வழிக்கா நிற்கவும்,  அடியாரடிகள் பட்டுப்

பழகித் தேய்ந்த கற்றரை  கால்கள்

வழுக்குதற்கு  ஏதுவாகவும் நிற்கும்

பிராகாரத்தைக்  கொண்ட கோயிலில்

எழுந்தருளியுள்ள வேங்கடனே !

கையாளுதற்கு மிகவெளியே உன் மீது

கவிபாடி  என் பாவத்தையும் இந்த

பிராகாரத்தில் கழித்துச் செல்லும்

நோக்கோடு வந்துள்ளேன்.  அருள்

புரிவாயாக என்பதாம்.

7.  Oh Lord Venkateswara,  Who are enshrined in

a temple, the floor of which has become slippery

due to the trampling of thousands of devotees

daily !  In the spacious  halls of Your temple the

infants excrete some times;  they urinate  many

times ;  Old people discard  the  leaves  after

eating the " Prasadam" ; small girls wipe their

hands on the pillars and walls.  In the same way

I have also come to your temple to discard my

sins by singing Your praise in easy Tamil.

மீண்டும் பிரார்த்திப்போம்.









No comments:

Post a Comment

Markandeya Pooja