Saturday, July 13, 2019

பாலிகை தெளித்தல், அங்குரார்பணம்





கோவில்களில் பிரம்மோற்சவத்திற்கு முன்பும் வீடுகளில் திருமணம் மற்றும் பூணூல் கல்யாணத்தின் போது பாலிகை தெளித்தல் என்ற சம்பிரதாயம் கடைப்பிடிக்க படுகிறது. இதை அங்குரார்பணம் என்றும் கூறுவர்.





பாலிகா என்றால் மண் கலசம் என்று பொருள். மண் கலசத்தில் விதைகளை முளைக்க விட்டு செய்ய படும் சம்பிரதாயம் என்பதால் இதற்கு பாலிகை தெளித்தல் என்று பெயர்.
அங்குர என்றால் முளை விட்ட விதை என்று பொருள். முளை விட்ட விதைகளை ஓடும் நீரில் அர்பணிப்பதால் இதற்கு அங்குரார்பணம் என்று பெயர்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


திருமணத்திற்கு முன் தினம் பாலிகா திரவியம் எனப்படும் கருப்பு எள், கருப்பு உளுந்து, கடுகு, நெல், பச்சை பயறு ஆகிய ஐந்து தானியங்களை ஊற வைக்க வேண்டும்.


 மறுநாள் அதில் சிறிதளவு பால் சேர்க்க வேண்டும். சுப நிகழ்ச்சியின் கர்த்தா ஊறிய விதைகளை ஐந்து மண் கலசத்தில் போட்டு அதன் மீது மண் தூவி பஞ்ச கவ்யத்தை தெளிப்பார்.

திருமணம் என்றால் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் தலா ஐந்து பாலிகைகள் ஏற்பாடு செய்வார்கள்.

திசைக்கு ஒன்றாக நான்கும் நடுவில் ஒரு மண் கலசமும் வைக்கப் படும். 
நடு பாலிகையில் பிரம்மாவையும், கிழக்கில் உள்ள பாலிகையில் இந்திரனையும், மேற்கில் உள்ள பாலிகையில் வருணனையும், தெற்கில் உள்ள பாலிகையில் யமனையும், வடக்கில் உள்ள பாலிகையில் சோமனையும் ஆவாஹணம் செய்வர்.




ஒற்றை படையில் சுமங்கலிப் பெண்கள் பால், நீர் கலந்த நீரை தெளிப்பர். பாலிகை தெளித்த பெண்களுக்கு தாம்பூலம் வழங்கப்படும்.


சுப நிகழ்ச்சி நல்ல படியாக நடக்க திக்பாலகர்களை வேண்டிக் கொள்ளும் சம்பிரதாயம் இது.

பாலிகை கரைத்தல்

இந்த பாலிகைகளை ஐந்து நாட்கள் வீட்டில் வைத்து விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.

சுபகார்யம் நடந்த ஐந்தாவது நாளில் பாலிகை கரைத்தல் என்ற சம்பிரதாயம் கடைப்பிடிக்க படுகிறது.

ஐந்து நாட்களில் விதைகள் நன்றாக முளைத்திருக்கும். இதை சுற்றி பெண்கள் பாட்டு பாடி கும்மி அடிப்பார்கள். பின்னர் முளைத்த விதைகளை ஓடும் நீரில் விடுவார்கள்.






நடைமுறையில் ஐந்து நாட்கள் பூஜை செய்ய இயலாததால் விழா நடந்த அன்றே பக்கெட் நீரில் பாலிகையை கரைத்து எறிந்து விடுகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் பாலிகை தெளித்தல்.


கோவில்களில் பிரம்மோற்சவத்திற்கு முதல் நாள் சண்டிகேஸ்வரர் அருகிலுள்ள புற்றுக்கு சென்று மண் எடுத்து வருவார். இதை மிருத்சங்காஹணம் என்பர். இந்த புற்று மண்ணைக் கொண்டு பாலிகை தயார் செய்யப்படும்.

திருவாரூர் தியாகேசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் போது சண்டிகேஸ்வரர் முருதம்பட்டிணம் அபிமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று மண் எடுத்து வரும் நிகழ்வு மிகவும் பிரபலமானது.







1 comment:

  1. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலம் உக்தஙேதீஸ்வரர் கோவிலில் அன்னையை ஈசன் திருமணம் செய்ய நிச்சயித்து திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொண்டார். அருகில் குறுமுலைப்பாலி என்ற இடத்தில் பாலிகை தெளிக்கப்பட்டது. இவ்விடத்தில் மூன்று சிவலிங்கங்களுடன் ஒரு சிறு சிவத தலம் உள்ளது அருகில் ஒரு குளமும் உள்ளது. குறுமுளைப்பாலி கிராமம் குணதலைப்பாடி என்றும் கொல்லாப்பாலி என்றும் அழைக்கப்படுகின்றது.

    ReplyDelete

Bangalore temples

Sri Kailasanatha Swamy Temple Nagarbhavi 1st Stage,  Chandra Layout Extension  II Stage, Nayanda Halli,  Bengaluru,   Karnataka 560072 https...