Saturday, October 12, 2019

தூர்வா கணபதி விரதம்





சிராவண (கார்த்திகை) மாதம் சுக்ல பட்ச ( வளர்பிறை) சதுர்த்தி அன்று தூர்வா கணபதி விரதம் கடைபிடிக்க படுகிறது.
அனலாசுரனை விழுங்கி தேவர்களை விநாயகப் பெருமான் காத்தருளிய தினம் இது.

தூர்வா என்பது அருகம்புல்லை குறிக்கும். அருகம்புல்லால் விநாயகரை வழிபடுவதால் இதற்கு தூர்வா கணபதி விரதம் என்று பெயர்.

தூ: என்பதற்கு தூரத்தில் இருப்பது என்று பொருள். அவம் என்றால் அருகில் வரவழைப்பது என்று பொருள்.

இந்த விரதத்தை கடைபிடிப்போர் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

விரதம் மேற்கொள்வோர் ஒரு மணை மீது கோலமிட்டு அதன் மீது அருகம்புல்லை பரப்பி ஆசனம் அமைக்க வேண்டும். விநாயகர் விக்ரகம் அல்லது படத்தை அதன் மீது வைத்து அருகம்புல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

தூர்வா சூக்தம் என்ற சுலோகத்தை கூறி அருகம்புல்லால் அர்ச்சிக்க வேண்டும். கூற இயலாதவர்கள்

ஓம் கணபதியே நமஹ
தூர்வாம் குராணி சமர்பயாமி

என்று கூறி அருகம்புல்லால் அர்ச்சிக்க வேண்டும்.


இந்த ஸ்லோகத்தை எப்போதெல்லாம் விநாயகருக்கு அருகம்புல் சாற்றுகிறோமோ அப்போதெல்லாம் கூறலாம்.


No comments:

Post a Comment

Markandeya Pooja