திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்
(தரிசனங் கண்டு கர்ப்பக் கிரகத்தினின்று
வெளிவந்ததும் மனதாரத் தரிசனங்
கிடைக்காதது குறித்து வருந்தி,
சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமின்றி
வழிபடுவோரைப் பழிப்பதுபோற் பாடியது.)
வெளிவந்ததும் மனதாரத் தரிசனங்
கிடைக்காதது குறித்து வருந்தி,
சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமின்றி
வழிபடுவோரைப் பழிப்பதுபோற் பாடியது.)
சிற்றச் சிறுகாலே வந்தென்னுந் திருப்பாவை
முன்னஞ் சீரடியை மன்னுஞ் சீரடியார்
முற்றந் தனிலோய்வாய் பத்தென்று மணிகாட்ட
சிற்றடிகள் முன்னீட்டி சொற்பதங்கள் தாங்கூட்டி
வற்றுங் குரலாலே சற்றும் பற்றின்றிக்
கத்தும் வழியிற்றான் முற்றுங் கற்றான்போற்
பற்றுங் கோளொடுயா னாமஞ் சாற்றிடுவேன்
எற்றித் தள்ளாம லேற்றுப் புரந்திடுவாய் !
சிற்றஞ் சிறுகாலே என்று தொடங்குந்
திருப்பாவையின் முதலடியாகிய அழகிய
சீர்களைக் கொண்ட அடியை நிலைபெற்ற
புகழையுடைய அடியா ரொருவர் தம்வீட்டு
முற்றத்தில் ஓய்வா யமர்ந்து கடிகாரம்
காலை மணி பத்தென்று காட்டிக்
கொண்டிருக்கத் தம் புன்மையான அடிகளை
நீட்டிக் கொண்டு சொற்களை மெதுவே
கூட்டி உரத்த குரலில் பக்தி சிறிதுமின்றிப்
பாடிய வழியில் நானும் எல்லாம்
கற்றவனைப் போல உன்னைக் கவர்ந்து
அருள்பெற வேண்டுமென்ற ஒரே
குறிக்கோளோடு உள்ளத்தில்
அன்பில்லாமல் உன் பெயரை மட்டும்
சொல்லிக் கொண்டுள்ளேன். அதற்காக
என்னை உதைத்துத் தள்ளி விடாமல்
ஏற்றுக் காப்பாயாக என்பதாம்.
திருப்பாவையின் முதலடியாகிய அழகிய
சீர்களைக் கொண்ட அடியை நிலைபெற்ற
புகழையுடைய அடியா ரொருவர் தம்வீட்டு
முற்றத்தில் ஓய்வா யமர்ந்து கடிகாரம்
காலை மணி பத்தென்று காட்டிக்
கொண்டிருக்கத் தம் புன்மையான அடிகளை
நீட்டிக் கொண்டு சொற்களை மெதுவே
கூட்டி உரத்த குரலில் பக்தி சிறிதுமின்றிப்
பாடிய வழியில் நானும் எல்லாம்
கற்றவனைப் போல உன்னைக் கவர்ந்து
அருள்பெற வேண்டுமென்ற ஒரே
குறிக்கோளோடு உள்ளத்தில்
அன்பில்லாமல் உன் பெயரை மட்டும்
சொல்லிக் கொண்டுள்ளேன். அதற்காக
என்னை உதைத்துத் தள்ளி விடாமல்
ஏற்றுக் காப்பாயாக என்பதாம்.
4. Oh, Lord ! I am chanting your holy name
without concentration to get Your grace like the
devotee who leisurely chants the hymn from
"Thiruppavai" beginning with the words"
"Sittramchirukale" at 10 AM sitting in the
veranda of his house, with his legs extended in
front, who is chanting that hymn slowly
faltering
for words every now and then, with a big
choking voice, without real piety, as if he is
having the complete knowledge of God. So I
beseach you not to kick me away for this deceit
but to approve my prayer and grant me
protection.
மீண்டும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment