திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்
எங்கள் தந்தையார் திருப்பதி
வெங்கடாசலபதி மீது அளவற்ற பக்தி
கொண்டிருந்தார். வருடம் தவறாமல்
திருப்பதிக்கு யாத்திரை செல்வார். பல
சமயம் கால்நடையாக மலை ஏறுவதும்
முடிக்காணிக்கை செலுத்துவதும் அவரது
வழக்கம்.
தாய் மொழி தமிழாக இல்லாத போதிலும்
தமிழில் அவருக்கு நல்ல புலமை உண்டு.
திருவேங்கடவன் மீது கொண்ட பக்தியும்
தமிழ் மீது கொண்ட பற்றும் இணைந்து
உருவானதே இந்த திருவேங்கடத்
திருப்பதிகம் என்னும் பாடல் தொகுப்பு.
தன் சொந்த செலவில் அச்சிட்டு
எல்லோருக்கும் இலவசமாக வினியோகம்
செய்தார். தமிழ் அறியாதவர்கள் புரிந்து
கொள்ள ஆங்கிலத்தில் சிறு விளக்கமும்
எழுதியுள்ளார்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்
எழுதப்பட்ட இந்த பாடல்கள் திருப்பதி
வெங்கடாசலபதியுடன் உரையாடுவது
போன்று அமைந்துள்ளது. நான் சிறுமியாக
இருந்தபோது என் தந்தை இந்த பாடல்களை
தன் சொந்த மெட்டில் தாளம் போட்டபடி
பாடியது எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது.
நகைச்சுவையும் பக்தியும் கலந்த இந்த
பாடல்களை பலரும் படித்து
சுவைப்பதற்காக வலைப்பதிவாக
சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
No comments:
Post a Comment