திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்
(தரிசனங் கிடைத்தலி னருமையை வியந்து பாடியது)
1. திரு நகரஞ் சுற்றி யெழு சிகரஞ் சுற்றியென் சிரசஞ் சுற்ற வஞ்சிகரஞ் சார்ந்து
கரு மகரஞ் சுற்று மொரு தடகம் மூழ்கி
துணி பலவுஞ் சுற்ற யணி பலவுஞ் சாற்றி
தெரு பலவுஞ் சுற்றும் நெடு வரிசை பற்றி
மணி பலவா நின்று பிணி பசியோ டூர்ந்து
பெரும் பிரகரஞ் சுற்றி யருங் கிரகம் வந்து
திரு வுருவங் காணக் கணமுந் தரவிலையே!
பொழிப்புரை
அழகிய நகரமாகிய
திருப்பதியை சுற்றி, ஏழு மலைகளையும்
சுற்றிச்சுற்றி யேறி, என் தலை சுற்றும்படி
(பேருந்தில்) அழகிய உச்சியை அடைந்து,
கரிய மீன்கள் நீந்தி திரியும் ஒப்பற்ற
புட்கரிணியில் மூழ்கி பல்வகையாடைகளை
யணிந்து ஆபரணங்கள் பலவற்றையும்
பூண்டு பல தெருக்களையும் சுற்றி
வருகின்றன நீண்ட வரிசையில் இடத்தைப்
பிடித்தது பலமணியளவாக நின்று
அதனாற்றோன்றிய பசிப்பிணிகளோடு
மெல்ல ஊர்ந்து சென்று பெரிய
பிராகாரங்களையும் சுற்றி அடைதற்கரிய
கர்ப்பக் கிரகத்தை அடைந்தும் உன்
திருவுருவத்தைக் காணக்
கணமொன்றையும் இங்குள்ளோர் தந்திலரே
என்பதாம்.

After roaming through the roads of Thirupathi
negotiating the seven hills one by one with my
head realing (due to nausea) I reach the top. I
have a dip in Pushkarini where black fish are
swimming about; I dress up with many a good
clothes; I wear many ornaments; I catch a place
in the long queue which winds through the
many streets around Your temple; I stand there
for many hours; I move slowly with hunger and
minor ailments (like headache,pain in knee
joints etc); I move through the big Prakarams of
the temple; finally I reach the Sanctum
Sanctorum. But after undergoing all these
hardships oh Lord Govinda! it is a pity that I am
not given even a single moment for your
darshan.
மீண்டும் பிரார்த்திப்போம்.

No comments:
Post a Comment