திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பணம்
(தரிசனப் பொழுதில் துரிதப் படுத்துவதை நொந்து பாடியது)
2. முன்செல்லு முன்செல்லு மென்றசொலு மென்செவியில்
வன் சொல்லாய் வீழ்ந்ததுவே வேங்கடவா மின் வெல்லும்
பொன்செல்லு முன்மனையிற் பண்சொல்லும் வேதியர்கள்
கண்செலவும் பொழுதின்றிக் கடத்துகிறா ரென்செய்வேன்?
பொழிப்புரை:
வேங்கடவா! முன்னே நகர்ந்துசெல்லும் முன்னே நகர்ந்து செல்லும் என்று
மந்திர மோதும் வேதியர்கள் கூறிய
சொற்களும் என் செவியில் வன்சொற்களாய்
வீழ்ந்தன. மின்னலையுந் தன்னொளியால்
வெல்லும் பொன் சென்று சேருகின்ற உன்
கோயிலில் உன்னை காணவுங் காலங்
கொடாது முடுக்குகின்றனரே,
என்செய்வேன்? என்பதாம்.
Lord Venkateswara ! The words"move forward,
move forward" ring in my ears as harsh words,
since the time for your darshan is thereby
shortened. The manthra-chanting priests in your
temple which wins the lightning in its glow and
where the melting gold flows all over, urge me to
move quickly and act like throwing me out
before I could have a glimpse of you. Oh, Lord,
what shall I do ?
மீண்டும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment