தென் இந்திய பொம்மை கொலுவில் இடம் பெறும் முக்கிய பொம்மைகளில் ஒன்று இந்த மரப்பாச்சி பொம்மைகள். மரப்பாவை என்பதே மருவி மரப்பாச்சி என்றாகிவிட்டது.
அமாவாசைக்கு அடுத்த நாள் கலசமும் இந்த மரப்பாச்சி பொம்மையையும் வைத்து கொலுவை துவங்குவார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டிலுள்ள எல்லா பொம்பைகளையும் கொலுவாக வைக்க இயலாவிட்டாலும் இந்த மரப்பாச்சி பொம்மைகளை மட்டுமாவது வைத்து வணங்குவது வழக்கம்.
திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனத்துடன் இந்த மரப்பாச்சி பொம்மைகள் பெண்களுக்கு வழங்கப்படும்.
ஆண் பெண் என ஜோடியாக விற்கப்படும் இந்த மரப்பாச்சி பொம்மைகள் திருமண தம்பதியரைக் குறிக்கிறது.
வேறு சிலர் குறிப்பாக மைசூர் பகுதி மக்கள் இந்த மரப்பாச்சி பொம்மைகளை ராஜா ராணியின் அம்சமாக பாவித்து இதனை 'பட்டத பொம்பே' என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆந்திராவில் இந்த மரப்பாச்சி பொம்மைகளை திருப்பதி ஏழுமலையானாகவும் பத்மாவதி தாயாராகவும் கருதுகின்றனர்.
பாரம்பரிய முறையில் இந்த மரப்பாச்சி பொம்மைகளை செய்பவர்கள் இதனை செஞ்சந்தன மரத்தாலோ கருங்காலி மரத்தாலோ செய்கின்றனர்.
செஞ்சந்தன மரத்தை இழைத்து கண் வலி, காயம், சிறு தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல இந்த செஞ்சந்தன மரம் அணு கதிரியக்கத்திலிருந்து காக்கும் சக்தி பெற்றது.
No comments:
Post a Comment