தென் பெங்களூரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான கோயில். இந்த கோவில் இங்கே கட்டப்பட்தற்கு பின்னணியில் ஒரு அதிசய நிகழ்வு காரணமாக அமைந்தது.
திருச்சி சுவாமிகள் என்று அன்புடன் அழைக்கப்படும் சிவரத்னபுரி சுவாமிகள் ஒரு சங்கராந்தி தினத்தன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் மூன்று கருடன்கள் வானில் வட்டமிட்டுக்கொண்டிருப்பதை கண்டார்.
அந்த மூன்று கருடன்களும் அவருக்கு முப்பெரும் தேவியர்களாக தெரிந்தனர்.
சுவாமிகள் அந்த இடத்தை பற்றி விசாரித்தபோது அந்த இடம் கென்சனஹள்ளி என்னும் சிறு கிராமம் என்பதும், முற்காலத்தில் அத்ரி மகரிஷியும், அனுசுயா தேவியும் தங்கி அங்கு தவம் புரிந்துள்ளனர் என்பதும் அவருக்கு தெரிந்தது.
அந்த இடத்தை வாங்கி முதலில் ஆசிரமம் அமைத்த சுவாமிகள் பின்னர் ஞானாக்க்ஷி ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கும் ஶீ சக்ரத்திற்கும் கோயில் எழுப்பினார்.
No comments:
Post a Comment