Thursday, June 27, 2019

Sri Durga Parameshwari temple Chandra layout.




கோவில் முகவரி
Sri Durga Parameshwari temple,
17th Cross road,
Nagarbhavi 1st stage,
Chandra layout,
Bangalore - 560072.





உற்சவ மூர்த்தி







கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள்


செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் துர்க்கா நமஸ்காரம் என்ற விளக்கு பூஜை.

செவ்வாய், வெள்ளி சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம்.

ஒவ்வொரு மாதமும் வளர் பிறை பஞ்சமி அன்று ஆசிலேஷ பலி.

பிரதி மாதம் சத்ய நாராயண பூஜை, சங்கடஹர சதுர்த்தி பூஜை.

வருடம் தோறும் நவராத்திரி, மஹா சிவராத்திரி, இலட்சதீப ஆராதனை.

துர்கா நமஸ்காரம்




செவ்வாய் கிழமை தோறும் குத்துவிளக்கை அலங்கரித்து தேவியை ஆவாஹணம் செய்து பூஜிக்கும் சம்பிரதாயம்.

ஆசிலேஷ பலி

பிரதி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் நாக தேவதையை நாக மண்டலத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும் சம்பிரதாயம். 





நாக தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் சிறப்பு பூஜை.


சத்யநாராயண பூஜை




வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக அலங்காரம்












தாமரைப்பூ அலங்காரம்





ஶீ மஹா மேரு குங்குமார்சனை




வெள்ளி கவசம்



2019 ஆம் ஆண்டு நவராத்திரி அலங்காரம்







வனதுர்கா அலங்காரம்





சரஸ்வதி அலங்காரம்







வாராஹி அலங்காரம்
















யக்க்ஷகானம்
































நவராத்திரி கொண்டாட்டம் 2018.

















நவராத்திரி அலங்காரம்

















பல்லக்கி உற்சவம்










இலட்ச தீப ஆராதனை











புஷ்பார்சனை








மஹா சிவராத்திரி





Wednesday, June 26, 2019

கணபதிக்கு உகந்த வன்னியும் மந்தாரையும்.




அருகம்புல்லுக்கு அடுத்தபடியாக விநாயகரை அர்ச்சிக்க மந்தாரையும் வன்னியும் விசேஷமாக கருதப்படுகிறது. இவை இரண்டும் விநாயகர் வழிபாட்டில் இடம் பெற்றதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.

மந்தாரை மரம்



புருசுண்டி முனிவரின் சாபத்தால் மந்தாரனும் அவனது மனைவி சமியும் மந்தார மரமாகவும் வன்னி மரமாகவும் மாறினர். (வன்னி இலைக்கு ஶீ சுமி பத்ரம் என்றொரு பெயரும் உண்டு) மந்தாரனின் தந்தையான தௌமிய முனிவர் கணபதியை வேண்டிட மனமிரங்கிய விநாயகர் மந்தாரையையும் வன்னியையும் தன் பூஜைக்குரியதாக ஏற்றுக்கொண்டார்.

Monday, June 24, 2019

மரப்பாச்சி பொம்மை



தென் இந்திய பொம்மை கொலுவில் இடம் பெறும் முக்கிய பொம்மைகளில் ஒன்று இந்த மரப்பாச்சி பொம்மைகள். மரப்பாவை என்பதே மருவி மரப்பாச்சி என்றாகிவிட்டது.


அமாவாசைக்கு அடுத்த நாள் கலசமும் இந்த மரப்பாச்சி பொம்மையையும் வைத்து கொலுவை துவங்குவார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டிலுள்ள எல்லா பொம்பைகளையும் கொலுவாக வைக்க இயலாவிட்டாலும் இந்த மரப்பாச்சி பொம்மைகளை மட்டுமாவது வைத்து வணங்குவது வழக்கம்.

திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனத்துடன் இந்த மரப்பாச்சி பொம்மைகள் பெண்களுக்கு வழங்கப்படும்.

ஆண் பெண் என ஜோடியாக விற்கப்படும் இந்த மரப்பாச்சி பொம்மைகள் திருமண தம்பதியரைக் குறிக்கிறது.

வேறு சிலர் குறிப்பாக மைசூர் பகுதி மக்கள் இந்த மரப்பாச்சி பொம்மைகளை ராஜா ராணியின் அம்சமாக பாவித்து இதனை 'பட்டத பொம்பே' என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆந்திராவில் இந்த மரப்பாச்சி பொம்மைகளை திருப்பதி ஏழுமலையானாகவும் பத்மாவதி தாயாராகவும் கருதுகின்றனர்.

பாரம்பரிய முறையில் இந்த மரப்பாச்சி பொம்மைகளை செய்பவர்கள் இதனை செஞ்சந்தன மரத்தாலோ கருங்காலி மரத்தாலோ செய்கின்றனர்.

செஞ்சந்தன மரத்தை இழைத்து கண் வலி, காயம், சிறு தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல இந்த செஞ்சந்தன மரம் அணு கதிரியக்கத்திலிருந்து காக்கும் சக்தி பெற்றது.






ஞானாக்ஷி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் பெங்களூர்



தென் பெங்களூரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான கோயில். இந்த கோவில் இங்கே கட்டப்பட்தற்கு பின்னணியில் ஒரு அதிசய நிகழ்வு காரணமாக அமைந்தது.


திருச்சி சுவாமிகள் என்று அன்புடன் அழைக்கப்படும் சிவரத்னபுரி சுவாமிகள் ஒரு சங்கராந்தி தினத்தன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் மூன்று கருடன்கள் வானில் வட்டமிட்டுக்கொண்டிருப்பதை கண்டார்.
அந்த மூன்று கருடன்களும் அவருக்கு முப்பெரும் தேவியர்களாக தெரிந்தனர்.




சுவாமிகள் அந்த இடத்தை பற்றி விசாரித்தபோது அந்த இடம் கென்சனஹள்ளி என்னும் சிறு கிராமம் என்பதும், முற்காலத்தில் அத்ரி மகரிஷியும், அனுசுயா தேவியும் தங்கி அங்கு தவம் புரிந்துள்ளனர் என்பதும் அவருக்கு தெரிந்தது.



அந்த இடத்தை வாங்கி முதலில் ஆசிரமம் அமைத்த சுவாமிகள் பின்னர் ஞானாக்க்ஷி ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கும் ஶீ சக்ரத்திற்கும் கோயில் எழுப்பினார்.

Markandeya Pooja