மலர்கள் பிறந்த கதை
சந்திர பகவானின் தவத்திற்கு மெச்சிய அம்பிகை அமிர்த தாரைகளை சந்திரனுக்கு அருளினார். சந்திரன் அதை அருந்தும் போது சிதறிய துளிகளே பூக்களாக மாறியதாம்.
சிவனுக்கு உகந்த பூக்கள்
புஷ்பவதி என்னும் நூல் புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, அரளி, நீலோத்பவம், தாமரை ஆகிய மலர்களை சிவனுக்கு உரிய அஷ்ட புஷ்பங்கள் என குறிப்பிடுகிறது.
மந்தாரை
மந்தாரை மலர்களால் ராகுவை பூஜித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.விநாயகருக்கு உகந்த 21 மலர்களில் மந்தாரையும் ஒன்று.
அரளி
ஒரு காரியத்தை துவங்கும் முன் அது வெற்றிகரமாக முடியுமா என அறிய பூ கட்டி பார்த்தல் என்ற சடங்கை செய்வார்கள். இஷ்ட தெய்வத்தின் முன் வெள்ளை அரளியையும் சிவப்பு அரளியையும் பொட்டலமாக கட்டி வைத்து வெள்ளை பூ வந்தால் வெற்றி என்றும் சிவப்பு பூ வந்தால் காரியம் கை கூடாது என்ற நம்பிக்கை உள்ளது.
திருக்ர வீரம், திருக்கள்ளி ஆகிய கோயில்களின் தல விருட்சம் அரளி.
குரு பகவானை சிவப்பு அரளிப் பூவால் அர்ச்சிக்க குடும்ப ஒற்றுமை மேம்படும்.
காளி, துர்க்கை, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு உகந்த மலராக அரளி கருதப்படுகிறது.
திரு நெடுங்களம் கோயிலில் உள்ள அரளி செடியில் மூன்று நிற பூக்கள் பூக்குமாம்.
மஞ்சள் சாமந்தி
மன அமைதி கிடைக்க வியாழக்கிழமை மஞ்சள் சாமந்தி பூக்களால் தட்சிணாமூர்த்திக்கு கிரீடம் அணிவித்து வழிபட வேண்டும்.
No comments:
Post a Comment