Monday, March 21, 2022

ஹைதராபாத் பிர்லா மந்திர்

 



பிர்லா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்ட கோயில்களில் ஹைதராபாத் பிர்லா மந்திரும் ஒன்று




உசைன் சாகர் ஏரிக் கரையில் 280 அடி உயரம் உள்ள குன்றின் மீது 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான கோவில்




கோவிலில் இருந்து பார்த்தால் ஹைதராபாத் நகரை கண்டு ரசிக்கலாம். இரவு நேரத்தில் கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.



2000 டன் சலவை கற்களை பயன்படுத்தி சுமார் 10 ஆண்டுகளில் கட்டப்பட்டு 1976ல் திறக்கப்பட்டது.




பிரதான தெய்வம் வெங்கடாசலபதி. கணபதி, அனுமான், சிவன், சக்தி, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, சாய்பாபா போன்ற பிற தெய்வங்களையும் தரிசிக்கலாம்.



 கொடிமரத்தின் உயரம் 42 அடி.

வெங்கடாசலபதி சிலையின் உயரம் 11 அடி.

மக்கள் தியானம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கோயில் கட்டபட்டதால் ஆலயத்தில் மணிகள் கிடையாது.

No comments:

Post a Comment

Bangalore temples

Sri Kailasanatha Swamy Temple Nagarbhavi 1st Stage,  Chandra Layout Extension  II Stage, Nayanda Halli,  Bengaluru,   Karnataka 560072 https...