வீட்டு பூஜை அறை மற்றும் கோவில்களில் இறை உருவங்களை பல வண்ண மலர்களால் அலங்கரித்து வழிபடும் முறை நம்மிடையே தொன்று தொட்டு நிலவிவருகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்திருக்கிறதா?
அழகான பல வண்ண பூக்களை பார்க்கும் போதே நம் மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பதை உளவியலாளர்களும் ஒப்புக் கொள்வார்கள்.
வண்ண மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம் பக்தர்களின் மனதை ஒருமுகப்படுத்தி இறை உருவங்களின் மீது லயிக்க வைக்கும் கருவியாக செயல்படுகிறது.
பெரும்பாலும் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் மலர்கள் நறுமணம் மிகுந்ததாக இருக்கும். இந்த நறுமணம் நமக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை.
இதுவும் ஒரு வகையில் அரோமா தெரபி போல செயல்பட்டு உளவியல் ரீதியாக நேர்மறை மாற்றங்களை நம்மிடையே கொண்டுவரும்.
இறை உருவங்களுக்கு மலர் அலங்காரம் செய்வது பண விரயம் என நினைப்பவர்களும் உண்டு. ஆனால் அந்த பூக்களை பயிரிட்ட விவசாயிகள் முதல் அதை கொண்டு வரும் போக்குவரத்தாளர்கள் மாலையாக தொடுப்பவர்கள் விற்பனை செய்பவர்கள் வரை பலருக்கு இது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறது.
நிர்மால்யம் என்று அழைக்கப்படும் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பழைய பூக்களை குப்பையில் போடக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால் இப்பூக்களை செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர்.