Friday, December 13, 2019

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர்



ஆஞ்சநேயர் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா ?

இராம - இராவண யுத்தத்தின் போது கும்பகர்ணனின் கரம் பட்டு அவன் தேரிலிருந்த ஒரு பெரிய மணி கீழே விழுந்தது. அதன் அடியில் ஆயிரம் வானரங்கள் சிக்கிக் கொண்டது. வெளியே வர இயலாத வானரங்கள் இராம நாமத்தை ஜெபித்தபடி காத்திருந்தன.

வானர படையை அமைக்கும் போது எந்த உயிர் சேதமும் இல்லாமல் எல்லா வானரங்களையும் திரும்ப அழைத்து வருவேன் என வானர குடும்பத்தினரிடம் இராம பிரான் வாக்களித்திருந்தார். எனவே யுத்தம் முடிவடைந்த பிறகு வானரங்களை கணக்கெடுக்கும் போது ஆயிரம் வானரங்கள் குறைவது தெரியவந்தது.

காணாமல் போன வானரங்களை போர்களத்தில் தேடியபோது கும்பகர்ணனின் மணிக்கு அடியிலிருந்து வானரங்கள் எழுப்பிய  இராமநாம ஜெபத்தின் ஒலியை கொண்டு வானரங்கள் இருந்த இடத்தை கண்டறிந்தார். ஆஞ்சநேயர் தன் வாலில் மணியை மாட்டிக்கொண்டு வானரங்களுக்கு சேதம் ஏற்படாமல் லாவகமாக தூக்கினார். ஆஞ்சநேயரின் இந்த செயலால் மனம் மகிழ்ந்த இராம பிரான் வாலில் மணியுடன் காட்சி தரும் அனுமனை வணங்குபவர்களின் துன்பங்களை தான் நீக்குவேன் என வரமளித்தார்.


இதை நினைவுகூரும் விதமாக பல ஆலயங்களில் வாலில் மணியுடன் கூடிய ஆஞ்சநேயரின் பிரதிமைகளை நிறுவும் வழக்கம் ஏற்பட்டது.






Markandeya Pooja