Monday, September 23, 2019

மாருதி மந்திர் விஜயநகர்







பெங்களூரு விஜயநகர் பகுதியில் அமைந்துள்ளது மாருதி மந்திர். வாலில் மணி கட்டிய அனுமன் நடுவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலதுபுறம் சீதா இலட்சுமணன் சமேத இராமபிரானும் இடதுபுறம் வினாயகரும் காட்சி தருகின்றனர்.



காய்கறி அலங்காரம்



இந்த  அனுமான் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் செய்யப்படும் விசேஷ அலங்காரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.



இராமர், சீதை, இலட்சுமணன்


கோவிலாக மாறிய கோத்தி பண்டே

நகரமாக உருவாகாத காலத்தில் இங்கிருந்த ஒரு பெரிய பாறை மீது குரங்கு ஒன்று வசித்து வந்தது. எனவே அந்த பாறையை கோத்தி பண்டே என்று அழைத்தனர். கன்னட மொழியில் இதற்கு குரங்கு பாறை என்று பொருள்.


வினாயகர்



பிறகு இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாறையை அனுமனாக வழிபட துவங்கினர். இதுவே மாருதி மந்திர் என்ற பெயரில் கோவிலாக உருவாக்க பட்டுள்ளது.


Markandeya Pooja